மகரஜோதியை காண சபரிமலையில் சிறப்பு ஏற்பாடு
(LBC Tamil) சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதியை பக்தர்கள் காண சிறப்பு ஏற்பாடாக கில் டாப், பாண்டித் தாவளம் உள்ளிட்ட இடங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் பக்தர்கள் ஆங்காங்கே கூடாரம் அமைத்து ஓய்வு எடுக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (புதன்கிழமை) எருமேலியில் அம்பலப்புழை, ஆலங்காடு சங்கங்களின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக வாவர் மசூதி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும். கேரள அரசாங்கம் போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.