மரண வீட்டிற்கு மாகாணம் விட்டு மாகாணம் பயணிக்கலாம்!
நெருங்கிய உறவினர்களது மரண வீட்டிற்கு அல்லது மருத்துவ தேவைக்களுக்காக மாத்திரம் மாகாணம் விட்டு மாகணத்திற்கு இடையே பயணிக்க முடியுமென பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையே பயணம் செய்யும் போது உரிய ஆவணங்கள் அல்லது இலத்திரனியல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் முதல் இதுவரையான காலப்பகுதியில், 50 ஆயிரத்து 994 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.