மருதங்கேணி பாலம் உடைப்பால் போக்குவரத்தில் பாதிப்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் உள்ள பாலம், கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உடைப்பு அபாயத்தில் உள்ளது.
பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய பாதை மற்றும் A9 வீதிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளதால், போக்குவரத்து தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதிக எடையுடைய வாகனங்கள் தொடர்ச்சியாகப் பயணிப்பதால், பாலத்தின் நிலை மேலும் மோசமான நிலைக்கு உள்ளாகும் என தெரிவிக்கப்படுகிறது.