மாகாண போக்குவரத்து ஆரம்பம்! திகதியும் அறிவிக்கப்பட்டது!
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பெரும் தொற்று காரணமாக மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இடைநிறுத்தப்பட்ட மாகாணங்களிற்கு இடையேயான பொது போக்குவரத்துக்களை எதிர்வரும் 1ம்திகதி தொடக்கம் மீள ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில், 1ம் திகதி தொடக்கம் அனைத்து மாகாணங்களுக்கும் இடையேயான பஸ், ரயில் போக்குவரத்துக்கள் ஆரம்பமாகவுள்ளதாக கூறியுள்ளார்.