யாழில் வலைவிரித்து தேடிய பொலிஸாரிடம் சிக்கிய திருடன்
கடந்த சிலதினத்துக்கு முன் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பூசகரிடம் ஒன்றரை பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றையதினம் குறித்த நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய உபபொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், சங்கத்தானையை சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவர் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.
இக்கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடை முல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கு பொலிஸாரால் வலைவீசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூசகரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை உருக்கியவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை, அவர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி திரு.யூட்சன் உத்தரவிட்டார்.