யாழில் வித்தியா, மலையகத்தில் இஷாலினியா? சிறுமிக்கு நீதி கேரி மன்னாரில் போராட்டம்..!
சிறுவர் துஸ்பிரயோகங்களை கண்டித்தும், டயகம பகுதியை சேர்ந்த இஷாலினியின் மரணம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகள் இடம்பெற வேண்டுமென வலியுறுத்தியும் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.
குறித்த கண்டன ஆர்பாட்டத்தை மன்னார் மெசிடோ நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் மன்னார் மாவட்ட பெண்கள் விழிப்புணர்வு சங்கத்தினரும் இணைந்து கொண்டிருந்தனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தின் போது பல்வேறு வாக்கியங்கள் எழுதப்பட்ட பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தி இருந்தனர்.
குறிப்பாக 2015ம் ஆண்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி “வித்தியாவிற்கு அடுத்து ஹிஷாலினியா” எனும் பதாகை மக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.