யாழ் போதனா வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம்கள்!
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு தொடர்ந்து சுகாதார சேவைகள் வழங்கப்படும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை, யாழ் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை மற்றும் யாழ் ஒஸ்மானிய கல்லூரியில் தங்கியிருக்கும் மக்களுக்கு மருத்துவ சேவைகள் முன்னுரிமையுடன் வழங்கப்பட்டு வருகின்றன.
வைத்தியர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள் இணைந்து முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். மக்களின் உடல் நலத்திற்கு தேவையான சுகாதார ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் வைத்தியசாலையில் தொடர்ச்சியான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் நீரில் மூழ்கிய பகுதிகளில் உள்ள சேவைகள் மாற்றப்பட்ட இடங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. நிலைமை சீரடைந்ததை அடுத்து அனைத்து சேவைகளும் விரைவில் வழமையான நிலைக்கு திரும்பும் என அவர் கூறினார்.