லொறியின் கீழ் சிக்கி உயிரிழந்த இளைஞன்..!

பானதுற வளான பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், பானதுற ரயில்வே நிலைய வீதியில் இயங்கும் S.S Motors நிறுவனத்தில் பணியாற்றிய இளைஞர் முஹம்மது ரிஸ்வான் (21) உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு, தனது வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் தொட்டவத்தை பகுதியில் உள்ள இல்லத்திற்குத் திரும்பி கொண்டிருந்த போது, அவர் லொறி ஒன்றின் கீழ் சிக்கியதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.