விசேட தேவையுடைய வாக்காளருக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு
எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டினை அடையாளமிடுவதற்காக உதவியாளர் ஒருவரை அழைத்து வரலாம் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கான நிபந்தனைகளாக, உதவியாளராக வருபவர் 18 வயதைக் கடந்தவராக இருக்க வேண்டும் மற்றும் அவர் வேட்பாளர் அல்லாதவராக இருக்க வேண்டும். அதாவது, அவர் எந்த ஒரு வேட்பாளரின் அதிகாரமளிக்கப்பட்ட முகவராகவோ, பிரதேச முகவராகவோ அல்லது வாக்கெடுப்பு நிலையத்தின் முகவராகவோ இருக்கக்கூடாது என்பதையும் தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
விசேட தேவையுடைய வாக்காளர்கள், தங்களுக்கு உதவியாளரை அழைத்துச் செல்ல முன்பு, தகுதிச் சான்றிதழ் ஒன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட தேர்தல் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர் அலுவலகங்கள் மற்றும் www.election.gov.lk என்ற இணையத்தளம் மூலம் பெற்றுக்கொள்ள முடியெமன என தெரிவிக்கப்பட்டுள்ளது.