விரும்பினால் போட்டியிடுங்கள் இல்லையென்றால் விடுங்கள் – சுமந்திரன்!
நான் தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்யவில்லை. நியமனக் குழுவில் உள்ளவர்கள் தம்மை தாங்களே வேட்பாளர்களாக தெரிவு செய்யும் வழக்கம் தான் தமிழரசு கட்சிக்குள் கடந்த காலங்களில் நீடித்து வந்ததாக சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
பல தடவை இதனை சுட்டி காட்டிய போதும் ஒருவரும் ஏற்று கொள்ளவில்லை. இம்முறை எனக்கு மட்டுமல்ல கொழும்பு கிளைக்கே நியமனக்குழு அந்தஸ்து வழங்கப்படவில்லை.
நியமனக்குழுவில் பதினொரு பேர் இருந்தனர் ஊடகங்கள் கூட சுமந்திரனிடத்தில் அவர்களின் விபரங்களைக் கேட்டபோது வெளிப்படுத்த மறுத்திருந்தார் அதற்கு காரணம் பெரும்பான்மையானர்கள் அவரின் ஆதரவாளர்கள்.
அப்படியொரு நிலையில் விண்ணப்பங்கள் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது என்னையும், அகிலன் முத்துக்குமாரசுவாமியையும் மற்றும் சசிகலா ரவிராஜையும் வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று கட்சியின் தலைவரான சேனாதிராஜா அறிவித்திருந்தார்.
ஆனால் சுமந்திரன் அதனை நிராகரித்தார் குறிப்பாக நான் ஊர்காவற்துறை தொகுதியை மையப்படுத்தி யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவதற்கு விரும்பினேன் ஆனால் எனக்கு கொழும்பில் போட்டியிடுமாறு கூறப்பட்டது.
கொழும்பை பொறுத்த வரை எமது நட்பு சக்திகளான மலையக கட்சிகளே களமிறங்குகின்றன. மனோ கணேசன் போன்ற ஒருவரே கொழும்பில் வெற்றி பெற முடியும். ஆகவே அப்படியொரு பிரதிநிதித்துவத்தை என்னால் சிதைக்க முடியாது என கூறினேன். எனது கருத்தை கேட்கவில்லை விரும்பினால் போட்டியிடுங்கள் இல்லையென்றால் விடுங்கள் என்ற வகையில் தான் பதிலளிக்கப்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.