அதிவேக நெடுஞ்சாலையில் ஓட்டுநர் தூங்கியதால் பேருந்து விபத்து
கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று தெற்கு அதிவேக வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது பஸ்ஸில் யாத்ரீகர்கள் குழுவொன்று பயணித்துள்ளது. காயமடைந்த பல பயணிகள் மற்றும் பேருந்தின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தின் சாரதி, தூங்கியமையினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்த பஸ் சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.