அரச உத்தியோகத்தர் கடனை 4 இலட்சமாக அதிகரிக்க தீர்மானம்

அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் இடர்காலக் கடன் தொகையை ரூ. 250,000 இலிருந்து ரூ. 400,000 ஆக உயர்த்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு வெளியிட்ட விசேட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை, அமைச்சின் செயலாளர் ஆலோகபண்டார அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2025ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளுக்கு ஏற்ப, அரச ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதால், இடர்கால கடனின் அதிகபட்சம் ரூ. 400,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இடர்காலக் கடன் தொகை தீர்மானிக்கும்போது, 2025.03.25 ஆம் தேதியிலான அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 10/2025 இன் அட்டவணை ii-ல் குறிப்பிடப்பட்ட அடிப்படை சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட வேண்டும்.

அதேபோன்று, கடனுக்கான அதிகபட்சம் உத்தியோகத்தரின் அடுத்த பத்து மாதங்களுக்கான சம்பளம் அல்லது ரூ. 400,000 அல்லது இரண்டில் குறைந்த தொகையாக இருக்க வேண்டும்.

மேலும், கடனுக்கான 40% சம்பள எல்லையை கணக்கீடு செய்வதற்கும், மற்றும் கடன் மீள அறவிடப்படும் சந்தர்ப்பத்திலும், 2025.03.25 ஆம் தேதியிலான அதே அடிப்படை சம்பள அட்டவணை துவக்கக்கணக்கீட்டிற்கும் அடிப்படையாக கருதப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.