அரச ஊழியர்கள் மீள பணிக்கு அழைப்பு! வர்த்தமானியும் வௌியீடு
நாட்டில் கடந்த 43நாட்களாக அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று காலை 4மணியுடன் தளர்த்தப்பட்ட நிலையில், அரச ஊழியர்களை மீளவும் பணிக்கு அழைக்கும் விதமாக சுற்று நிரூபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் குறித்த சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.