அரச வைத்தியசாலை கனிஷ்ட நிலை சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
(LBC Tamil) நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் கனிஷ்ட நிலை சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட 03 விடயங்களை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திர சுகாதார சேவை சங்கத்தின் பொருளாளர் சுசித் அருணசிறி தெரிவித்தார்.
பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் அத்தியாவசிய சிகிச்சைகளுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் கூறினார்.