அறுகம்பை தாக்குதல், மாலைதீவு பிரஜை கைது
அம்பாறை மாவட்டத்தின் அறுகம்பை பிரதேசத்தில் திட்டமிட்ட தாக்குதல் தொடர்பாக மாலைதீவு பிரஜை உட்பட ஆறு சந்தேக நபர்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களை இலக்கு வைத்து நடாத்தப்படவுள்ளதாக அமெரிக்க தூதரகம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது, இதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.