அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு!
யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் புதன்கிழமை (13) காலை 8.45 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வை யாழ்ப்பாண மாவட்ட செயலரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், மேலதிக அறிவுறுத்தல்களை சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களுக்கு உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி. அமல்ராஜா வழங்கினார்.