ஆட்சி அமைப்பதற்கான வியூகம் எங்களிடம் உள்ளது – ராகுல்
மத்தியில் ஆட்சி அமைப்பது குறித்து இந்திய கூட்டணி கட்சியினருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்போமென காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெரிவிக்கையில்,
தெலுங்கு தேசம், ஐ.ஜ.த. கட்சியை அழைப்பது குறித்து நாளை ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஆட்சி அமைப்பதற்கு எங்களுக்கும், பா.ஜ.கவுக்கும் இடையே மெலிதான கோடு மாத்திரமே உள்ளது.
வயநாடு, ரேபரேலியில் எந்த தொகுதியை இராஜினாமா செய்வது தொடர்பாக ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். ‛இண்டியா’ கூட்டணி ஆட்சி அமைக்க எங்களிடம் வியூகம் உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ”இதுகுறித்து கார்கே தெரிவிக்கையில், எங்களின் எல்லா யுக்திகளையும் சொல்லிவிட்டால் மோடி உஷார் ஆகிவிடுவார். கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” – என்றார்