ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாடுகள் தளர்வு
ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல கூறியதாவது, பன்றிக் காய்ச்சல் பரவல் தற்போது குறைந்துள்ளதால் பழைய வர்த்தமானி அறிவித்தலை தளர்த்தி, ஆரோக்கியமான பன்றிகளை போக்குவரத்து செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், காய்ச்சலால் பாதிக்கப்படாத பன்றிகளை மட்டுமே இனி பாதுகாப்பாக எடுத்துச் செல்ல முடியும்.
மேல் மாகாணத்தில் 50% பன்றிகள் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும், கம்பஹா மாவட்டத்தில் அதிக அளவிலான பன்றிகள் உயிரிழந்துள்ளதாகவும் மேல்மாகாண கால்நடை திணைக்களத்தின் பணிப்பாளர் கே.கே. சரத் தெரிவித்தார்.