இந்தியா செல்லும் ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து இருதரப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல்களை நடத்துவார்” என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தவும், பொருளாதார மற்றும் அரசியல் ஒத்துழைப்புகளை அதிகரிப்பது என தெரிவித்தார் .