இன்று ஜனாதிபதியிடம் நெல், அரிசி இருப்பு அறிக்கைகள் கையளிக்கப்படவுள்ளது
நெல் மற்றும் அரிசி கையிருப்புகள் தொடர்பான ஆய்வறிக்கை இன்று (06) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை, 17 மாவட்டங்களில் நடைபெற்ற ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த மாவட்டங்களில் உள்ள பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான அரிசி ஆலைகளில் உள்ள நெல் மற்றும் அரிசி கையிருப்புகள் குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை சமீபத்தில் கணக்கெடுப்பை நடத்தியது. அறிக்கையில் கூறப்பட்ட தகவல்களை பரிசீலித்த பிறகு, ஜனாதிபதி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேசமயம், சந்தைகளில் அரிசி கட்டுப்பாட்டு விலைக் காட்டிலும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களில் ஆர்ப்பாட்டங்கள் எழுந்துள்ளன. மேலும், கடைகளில் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.