இன, மத வேறுபாடுகளுக்கு இடமில்லை – கிழக்கு மாகாண ஆளுநர்.
நாட்டில் இனிமேல் இன, மத வேறுபாடுகளுக்கு இடமில்லை நாம் எல்லாரும் இலங்கையர் மட்டும்தான். நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் தமிழர்கள் முஸ்லிம்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாக்களித்து வெற்றியடைய வைத்துள்ளனர் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
இனி நமக்கு எல்லாருக்கும் ஒரே நாடு இலங்கை என்ற அடையாளம்தான். எனவே கிழக்கு மாகாணத்தை கட்டி எழுப்ப அனைவரது ஒத்துழைப்பையும் நான் வேண்டி நிற்கின்றேன். எமது மாகாணத்தில் சகல மக்களும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற ஆதரவினை வேண்டி நிற்கிறேன். என அவர் குறிப்பிட்டுள்ளார்.