இரா.சம்பந்தன் மறைவிற்கு கிழக்கு ஆளுநர் இரங்கல்
இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தனின் மறைவிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல் செய்தியை தனது முகநூல் ஊடாக தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான கௌரவ இரா.சம்பந்தன் எம்.பி. அவர்களின் மறைவு குறித்து நான் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நீண்டகால நண்பரும், இலங்கையின் எழுச்சியூட்டும் மற்றும் நம்பிக்கைக்குரிய தலைவர் என பதிவிட்டுள்ளார்.