10 இலங்கையின் வங்கிகளை பின்தள்ளி தரப்படுத்தும் Fitch Ratings
(LBC Tamil) சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான Fitch Ratings நிறுவனம், இலங்கையில் உள்ள 10 வங்கிகளை பின்தள்ளி தரப்படுத்த தீர்மானித்துள்ளது.
நாட்டின் இரண்டு முக்கிய அரச வங்கிகள் மற்றும் 08 தனியார் வங்கிகளின் கடன் மதிப்பீடுகள் குறைக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் அண்மைய தரப்படுத்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் நீண்ட கால நிதி நிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாமை, அரசாங்கம் விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் என்பன இதற்கான காரணமென Fitch Ratings நிறுவனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக இலங்கை மின்சார சபை, அதன் அனுசரணை நிறுவனமான லக்தனவி நிறுவனமும் தரப்படுத்தலில் பின்தள்ளப்பட்டுள்ளன.