இலங்கை முழுதும் நாளை துக்க தினமாக பிரகடனம்
நாடளாவிய ரீதியில் நாளை செவ்வாய்கிழமை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இலையில் அவருக்கான இரங்கல் தெரிவிக்கும் வகையில் மே 21ஆம் திகதி துக்க தினமாக இலங்கை அரசால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அரச நிறுவனங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படவேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.