இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது!
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் புலனாய்வு நடவடிக்கையின் கீழ், ராகம, மத்துமகல பிரதேசத்தில் வசிக்கும் ஒரு பெண் பாடசாலை அதிபர் வியாழக்கிழமை (07) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் அதிபர், ராகம பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையில் பணியாற்றுகிறார். இம்முறை, முறைப்பாட்டாளர் தனது பிள்ளையை பாடசாலையின் முதலாம் தரத்தில் சேர்க்க கோரியதற்காக, அந்த பெண் அதிபர் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா இலஞ்சம் கோரியதாக கூறப்பட்டுள்ளது.
இறுதியில், அந்த பெண் அதிபர், பாடசாலையின் அதிபர் அலுவலகத்தில் முறைப்பாட்டாளரிடமிருந்து இலஞ்சத்தை பெற முயன்ற போது, அதே நேரத்தில் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.