ஈரான் தலைவரின் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
ஈரான் தலைவரின் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலின் திரா நகரின் மீது இன்று (03) ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இதனை புகாரளித்துள்ளன.
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் அருகே உள்ள ராணுவ இலக்குகளை இலக்கு வைத்து, இஸ்ரேல் பாதுகாப்பு படை கடந்த 26ஆம் திகதி அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த தாக்குதலால் ஈரானுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டதில்லை எனவும், இஸ்ரேலின் தாக்குதலில் இரண்டு ஈரான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐ.நா. சாசன விதிகளுக்கு எதிரானது என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஐ.நா. சாசனம் 51-வது பிரிவின்படி, ஈரானுக்கு தங்களை தற்காத்துக் கொள்வதற்கான உரிமையும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்க வேண்டிய கடமையும் உள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி மிரட்டல் விடுத்துள்ளார்.