உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகியுள்ளது.
எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதில் 58 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 329 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.