உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிந்த பிறகு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை காலத்தில் வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளைத் தொடங்குவார்கள் என்பதால், பரீட்சைக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்ற காரணத்தால், தேர்தல் ஆணையம் அறிவிப்பை பரீட்சை முடிந்த பிறகு வெளியிட வேண்டும் என முடிவு செய்துள்ளது.
மேலும், சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை நடவடிக்கைகள் இந்த வாரம் மீண்டும் தொடங்குவதாகவும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட கட்சித் தலைவர் கூட்டம் நாளை அமைச்சரான பிமல் ரத்நாயக்காவின் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.