ஐரோப்பிய ஒன்றிய குழு ஜனாதிபதியுடன் முக்கிய கலந்துரையாடல்
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ தலைமையிலான பிரதிநிதிகள் குழு, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நேற்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விரிவான விளக்கங்களை பெற்றது.
ஜனாதிபதி, இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், முக்கிய சுற்றுலா பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அவசர சேவைகள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தியிருப்பதை தெரிவித்தார்.
இலங்கையின் முக்கிய பங்காளியாக உள்ள ஐரோப்பிய ஒன்றியம், நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, தொழிற்கல்வி, மற்றும் அமைதி மற்றும் நல்லிணக்கம் உள்ளிட்ட துறைகளில் தமது ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் உறுதிபூண்டது.
நெதர்லாந்து, பிரான்ஸ், ருமேனியா உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டு, ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.