ஒரு குழந்தையின் தாய் வெட்டிக் கொலை

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் ஊழியர் ஒருவர் இன்று (28) அதிகாலை லியனகேமுல்ல பிரதேசத்தில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட பிரச்சினையினால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் உயிரிழந்துள்ளார்.

காலி மேற்கு பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய மதுவந்தி என்ற  ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிய வந்துள்ளார்

பின்னர் சீதுவையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் பணிபுரியும் நபருடன் தற்காலிகமாக தங்கியுள்ளார்.

இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற சம்பவமொன்றின் அடிப்படையில் இவருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், இன்று (28) அதிகாலை 02.00 மணிக்கும் 03.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இருவரும் புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு முன்பாக நடந்து செல்லும் CCTV காட்சிகளும் கிடைத்துள்ளது.

இந்த தேவாலயத்திற்கு எதிரே உள்ள சாலையின் அருகே பலத்த வெட்டுக்காயங்களுடன் அவள் கொல்லப்பட்டாள்.

நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக சில்வா சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் அவரது சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.