ஒரு மாதத்தை எட்டிய ஆசிரியர் போராட்டம்!
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து முன்னெடுத்திருக்கும் இணையவழி கற்பித்தலை பணிப்புறக்கணிப்பு செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை இன்றுடன் ஒருமாதத்தை அடைகின்றது.
சம்பள பிரச்சினையை முன்வைத்து அதிபர்களும், ஆசிரியர்கள் இந்த தொழிற் சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றையதினம் ஆசிரியர் சங்கங்கள் அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடைலை முன்னெடுத்திருந்தன.
தமது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குமாறு கோரியே, ஆசிரியர் சங்கங்கள் இக்கலந்துரையாடலை நடத்தியிருந்தன.
கொழும்பில் நடைபெற்ற இச்சந்திப்பில், ஏனைய தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து நாளை சத்தியாகிரக போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள முடிவு எட்டப்பட்டதாக ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசப்ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.