கடல் தொழிலில் நவீன பொறிமுறை திட்டம் – ஆரம்பித்து வைத்தார் பிரதமர்
ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் நிதிப் பங்களிப்போடும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் உருவாக்கப்பட்ட நவீன தொழில்நுட்ப பொறிமுறையை பலநாள் மீன்பிடி கலங்களில் பொருத்தும் திட்டம் இன்று பிரதமரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அறுவடைக்குப் பின் பழுதடையும் கடல் உணவுகளின் அளவை குறைப்பதன் ஊடாக உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் குறித்த நவீன தொழில்நுட்ப பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் கடல் தொழிலாளர்களின் வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.