கணேமுல்ல சஞ்சீவ படுகொலை தொடர்பாக மேலும் இருவர் கைது

பாதாள உலக குழுவினருடன் தொடர்புடைய “கணேமுல்ல சஞ்சீவ” என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில், மினுவாங்கொடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சந்தேக நபர்கள் **நேற்று (28)** கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள்:
1. உதார நிர்மல் குணரத்ன (28) – மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்தவர்.
2. நளின் துஷ்யந்த (31) – துனகஹ பகுதியைச் சேர்ந்தவர்.

இவர்கள், “கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையில் ஈடுபட்டவர்களுக்கு SIM அட்டைகள் வழங்கி உதவியதாக சந்தேகிக்கப்படுகின்றனர்.

இந்த வழக்கில் இதுவரை 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு முன்னெடுத்து வருகிறது.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.