கம்பஹாவில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது
கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மினுவாங்கொடை வீதியில் போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் நிட்டம்புவ பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடையவர் ஆவார்.
அவரிடமிருந்து 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 25 மற்றும் 90 போலி வெளிநாட்டு நாணயத்தாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.