குட்டி குரங்கு கடித்து மூன்று பிள்ளைகளின் தந்தை பலி
யால காட்டில் குட்டி குரங்கு கடித்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய உபுல் ஜயந்த உயிரிழந்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை, மாகம பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து உயிரிழந்தவரின் மனைவி தெரிவிக்கையில்,
மாட்டு மந்தையின் உரிமையாளராக தினமும் காலையில் மாடுகளை யால காட்டிற்கு அழைத்துச் சென்று, மாலையில் மாட்டு மந்தையுடன் வீடு திரும்புவார்.
தினமும் மாடுகளுக்கு பால் கறந்து விட்டு மோட்டார் சைக்கிளில் யால காட்டுக்கு செல்கிறார். கால்நடைகளை கட்டி வைத்து மாலையில் கொண்டு வருவார். இப்படி ஆடு மாடுகளை காடுகளுக்கு மேய்பதற்காக செல்பவர்களும் உண்டு.
மே 19ம் தேதி காலை வழக்கம் போல் மாட்டு மந்தையுடன் காட்டு பகுதிக்கு சென்றார். அவர் சென்ற ஒரு மணி நேரம் கழித்து, எனக்கு அழைப்பு வந்தது. கணவரின் பின்னால் இருந்து சிறிய குரங்கு ஒன்று வந்ததாகவும், அவர் கீழே விழுந்ததை அடுத்து, யால சபாரி ஜீப்பில் திஸ்ஸமஹாராம வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளதாகவும் தொலைபேசியில் பேசிய நபர் தெரிவித்தார்.
மருத்துவமனைக்குச் சென்றபோது எனது கணவரின் காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. வயிற்றில் காயங்களும் இருந்தது. அன்று மருத்துவமனையில் என் கணவர் என்னிடம் பேசினார். பின்னர் சுயநினைவை இழந்தார். அங்கிருந்து கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். அவருக்கு சர்க்கரை நோய் உள்ளது.
காலை துண்டிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறினர். கராப்பிட்டிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையில் கணவரின் இடது கால் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 24ம் தேதி காலை, என் கணவரை பார்க்க வந்தபோது, அவர் இறந்துபோனது தெரியவந்தது’’ என்றார்.
பிரேத பரிசோதனையில் இறந்தவருக்கு நிமோனியா இருப்பது தெரியவந்துள்ளது.