கேகாலை நகரத்தில் 48 மணிநேர நீர் விநியோகத் தடை
கேகாலை நகரத்தில் 48 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது. கேகாலை நகரத்திற்கு நீர் வழங்கும் பிரதான குழாயில் பாறை ஒன்று சரிந்து விழுந்ததினால், இந்த தடை ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நீர் விநியோகத் தடை இன்று (05) மாலை 6.00 மணி முதல் நாளை (06) காலை 6.00 மணி வரை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.