கைது செய்யப்பட்ட 22வயது இளைஞன் சடலமாக மீட்பு!
தம்மை புலனாய்வாளர்கள் என தெரிவித்து மட்டக்களப்பு, இருதயபுரம் பகுதியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து 22வயது இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்யப்படார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 வயதுடைய சந்திரன் விதுசன் எனும் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்றிரவு நண்பரது தொலைபேசியில் இருந்து வெளியில் வருமாறு சடலமாக மீட்கப்பட்ட இளைஞனுக்கு அழைத்து வந்துள்ளது.
இதனை அடுத்து குறித்த இளைஞர் வெளியில் வந்த போது வீதியில் நின்றவர்கள் தம்மை புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் என தெரிவித்து குறித்த இளைஞனை கைது செய்தனர்.
இதன் போது குறித்த இளைஞன் புலனாய்வு பிரிவினர் என தெரிவித்தவர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இளைஞன் நோய் காரணமாக இன்று காலை உயிரிழந்ததாக பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞன் தாக்கப்பட்டே கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறியும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஜீவராணி கருப்பையாப்பிள்ளையும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர்.
தற்போது இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி S.W ஜெயந்த தலைமையிலான பொலிஸ் குழு ஒன்று இது விசாரணைகள் முன்னெடுத்து வருகிறது.
மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.