கொழும்பு நோக்கி பயணித்த SLTB பஸ் வவுனியாவில் திருப்பி அனுப்பப்பட்டது!
மாகாணங்களுக்கிடையே விதிக்கப்பட்ட பயணத்தடையானது இன்றையதினம் அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் செல்பவர்களுக்கு மாத்திரம் தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று ஈரபெரியகுளம் சோதனை சாவடியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவையின்றி வேறு தேவைகளுக்காக பயணம் செய்யாதவர்களை ஏற்றி சென்றமையினாலேயே ஏற்றி குறித்த பேருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் மாகாணங்களிற்கு இடையில் பேருந்து மற்றும் புகையிரதத்தில் பயணிப்பதற்கு இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று வவுனியா புதிய பேருந்து நிலைய பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அரச பேருந்து ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் வழிமறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே மீள வவுனியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.