சீனிக்கான விசேட வரி நீடிப்பு!
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள 50 ரூபா விசேட வர்த்தக வரியை, அரசாங்கம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்த வரி கடந்த வருடம் நவம்பர் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தது.
இந்த விசேட வரியின் நீடிப்பு தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.
சர்வதேச சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதால், தற்போதைய அரசாங்கம் உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளை குறைப்பதாக கூறினாலும், குறிப்பிட்ட வரிகளை அறவிடும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.