சுமந்திரனுக்கு அந்த உணர்வு இல்லை

சுமந்திரன் நேற்று ரணிலை தனியாக சந்தித்தது தொடர்பிலான ஊகங்கள் வெளிவ்ந்துள்ளது.

தனது அலுவல்களை தனியாக சந்தித்து நிறைவேற்றுவது சுமந்திரனின் உத்தியாகும். யாரிடமும் சொல்லாமல் தனியாக தனது வருவாயை அவர் பார்த்துக் கொள்வார். எனது அருமை மாணவன் சுமந்திரன் பல தகைமைகளைக் கொண்டிருந்தாலும் தமிழ் தேசிய உணர்வு இல்லை. எல்லாவற்றையும் மூளையால் பார்ப்பாரே ஒழிய உணர்வினால் பார்க்க மாட்டார். இவ்வாறு சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், “தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய மாநாட்டுக்கு சிறீதரனை பிரதம விருந்தினராக அழைத்திருக்கின்ற நிலையில் சேர்ந்து பயணிக்கும் சாத்தியங்கள் உள்ளதா?” – என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தமிழ்த் தேசியக் கட்சிகள் என்ற முறையிலும், தமிழ்த் தேசிய உணர்வுகளைக் கொண்டவர்கள் என்ற முறையிலும் எங்களுக்கும் சிறீதரனுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது.

இந்த விதத்திலே என்னுடைய அருமை மாணவன் எம்.ஏ.சுமந்திரன் பலவிதமான தகைமைகளைக் கொண்டிருந்தாலும் தமிழ்த் தேசிய உணர்வு அவருக்கு இல்லை. அவர் எல்லாவற்றையும் மூளையினால் பார்ப்பாரே ஒழிய உணர்வினாலோ – உணர்ச்சியினாலோ பார்க்கக் கூடியவர் அல்லர்.

அந்தவிதத்தில் தமிழரசுக் கட்சியினுடைய தலைவராகச் சிறீதரன் வருவதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதனையே வரவேற்கின்றோம்.

இதுவரை காலமும் தமிழ்த் தேசியத்துக்காகக் குரல் கொடுத்து வருகின்ற ஒருவர் என்ற முறையிலே அவரை நாங்கள் அழைத்திருக்கின்றோம். அதேபோன்றுதான் பேராசிரியர் கணேசலிங்கத்தையும் அழைத்திருக்கின்றோம்.

ஆகவே, தமிழ்த் தேசியத்தின் அடிப்படையிலே நாங்கள் முன்னோக்கிச் வேண்டும் என்பதால் அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.” – என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.