ஜனாதிபதியின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

யாழ்ப்பாணத்தின் நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய பொங்கல் விழாவிற்காக வந்துள்ள ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து போராட்டம் ஒன்று ஆரம்பமாகி நல்லூரை நோக்கி நகர்ந்து வருகிறது.

இப்போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவுகள்,அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

ஜனாதிபதியின் வருகைதரவுள்ளமையினால் நல்லூர் பகுதியை சுற்றி வீதிதடைகள் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.