தரம் 2 – 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க புதிய பொறிமுறை
(LBC Tamil) பாடசாலைகளில் தரம் 02 முதல் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய பொறிமுறையை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எனினும், ஆறாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளுதல் புதிய பொறிமுறைக்குள் உள்வாங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தரம் 01 முதல் 05 வரையான வகுப்புகளுக்கு தற்போது அதிகபட்சமாக 40 மாணவர்கள் மற்றும் தரம் 07 முதல் 11 வரையான வகுப்புகளுக்கு அதிகபட்சம் 45 மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.