தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸிலிருந்து 95 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றல்
(LBC Tamil) தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றிலிருந்து ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பஸ்ஸின் கடைசி இருக்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 95 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, நேற்றிரவு பஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரிடமும் சாரதி மற்றும் நடத்துநரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் எதிர்வரும் 04 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேசாலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.