தாய்லாந்து சுற்றுலா ஆலோசகராக நடிகர் சோனு சூட் நியமனம்

தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் சோனு சூட், தமிழில் ‘கள்ளழகர்’, ‘ஒஸ்தி’, ‘அருந்ததி’, ‘தமிழரசன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிரபலமானவர். கொரோனா லாக்டவுனின் போது, அதிகமாணவர்களுக்கு உதவுவதன் மூலம் மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றார்.
தற்போது, அவர் தாய்லாந்து சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வ விளம்பர தூதராகவும், கவுரவ ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய பொறுப்பில், அவர் இந்தியாவில் தாய்லாந்து சுற்றுலாவை மேம்படுத்தும் பணியில் ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குவார். இதற்காக, தாய்லாந்து அரசுக்கு சோனு சூட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சி, தாய்லாந்தின் சுற்றுலா துறையை மேலும் பிரபலமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



