தாலிபான்களுக்கு இலங்கையும் ஆதரவு?
தாலிபான்கள் அமைப்பிற்கு இலங்கை ஆதரவு தெரிவிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையை பொறுத்த வரை அது சீனாவின் பிடியிலே உள்ளது. சீனாவுக்காக தனிஒரு சுயாட்சி பிரதேசத்தினையே இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை, பாகிஸ்தானுக்கு தொடர்ந்தும் நட்பு நாடாகவே இருந்து வருகிறது.
இந்தியாவிடம் ஒரு பக்கம் நட்புநாடு என தெரிவித்து உதவிகளைப் பெற்றாலும் நெருக்கடியான தருணங்களில், இந்தியாவிற்கு எதிராக செயற்படுவதும் இலங்கையின் தொடர் போக்காகும்
தற்போது தாலிபான்களின் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை சீனாவும் பாகிஸ்தானும் ஆதரிதந்துள்ளன. இந்த துணிச்சலில் இலங்கையும் எமக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென தாலிபான்கள் நட்புக்கரம் நீட்டியுள்ளனர்.
நிச்சயமாக இலங்கையும் இந்தியாவினை பற்றி கவலைபடாமல் தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்கள் இலங்கைக்கு விடுத்த அழைப்பு
விடுதலை புலிகளுக்கும் எமக்கும் எப்போதும் தொடர்பு இருக்கவில்லை எனவும், இனி நாங்கள் பெளத்தமத சின்னங்களை பேணி பாதுகாப்போம் என உறுதி அளிக்கிறோம்.
இலங்கை எம்மை பயங்கரவாதிகளாக பார்க்ககூடாது. அன்னிய ஆக்கிரமிப்பிற்கு உள்ளான எமது தாய்நிலத்தினை மீட்கவே 20 ஆண்டுகளாக யுத்தம் செய்தோம்.
அன்னிய சக்திகளிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக இலங்கை எப்படி சுதந்திர போராட்டங்களை நடத்தியதோ அதனை போலதான் நாமும் சுதந்திரத்திற்காக யுத்ததினை நடத்தினோம். இதனை இலங்கை அரசு புரிந்துகொள்ள வேண்டும் என தலிபான்களின் பேச்சாளர் சுஹைல் ஷகீன் தெரிவித்திருந்தர்.