தெற்கின்மாற்றம் தமிழ் மக்களுக்கான மாற்றமல்ல!
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் குருசாமி சுரேந்திரன், தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலில் இணைந்து செயல்படும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு வலியுறுத்தினார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறியவர்கள், தற்போது தமது சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்துவது இரட்டை நிலைப்பாடு என அவர் கண்டித்தார்.
சுரேந்திரன் மேலும் தென்னிலங்கை கட்சிகளின் ஆதரவாளர்களை அடையாளம் கண்டு புறக்கணிப்பதன் அவசியத்தை பற்றி பேசினார். தமிழ் மக்களின் நலனில் உண்மையாக செயல்படுவோருக்கு மட்டுமே ஆதரவு அளிக்க வேண்டும் எனவும், வடக்கு-கிழக்கு மக்கள் தெற்கு அரசியலின் மாற்றங்களை பின்பற்றாமல், தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.