தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதியின்றி மருந்துகளை கொள்வனவு செய்ய முயற்சி…

(LBC Tamil)

Colombo (News 1st) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதியின்றி அதிகமான இந்திய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் விசேட விசாரணையொன்றை முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவசர மருந்து கொள்வனவு என்றால் என்ன? 

தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியின் காரணமாக, நாட்டிற்கு தேவையான மருந்துகளை தட்டுப்பாடின்றி இறக்குமதி செய்வதில் அரசாங்கம் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

நிலவும் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வாக அவசரமாக மருந்துக் கொள்வனவு செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை கடந்த ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் 
கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

45 நாட்களுக்குள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள Severit தனியார் மருந்து உற்பத்தி நிறுவனம் 3 மாதங்களுக்குத் தேவையான மருத்துப் பொருட்களை இலங்கைக்கு வழங்க இணங்கியுள்ளதாக அந்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதற்கமைய, இந்தியக் கடன் திட்டத்தில் எஞ்சியுள்ள நிதி மற்றும் வேறு நிதியை பயன்படுத்தி அரச மருந்தாக்கல்  கூட்டுத்தாபனத்தின் அனுமதியுடன் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதியின்றி 28 வகையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவை பிழையாக வழிநடத்தி தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் அனுமதி இருப்பதாகக் கூறி குறித்த மருந்துகளை இறக்குமதி செய்ய முயற்சித்துள்ளதாகவும் அவற்றில் 12 மருந்துகள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அதேநேரம் 03 வகையான மருந்துகள் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படுவதாகவும் முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கௌசிக் என்ற மற்றொரு இந்திய நிறுவனத்திடமிருந்து இது தொடர்பான அவசர கொள்முதல் தொடர்பான மற்றுமொரு அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சரின் பதில் என்ன?

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளருடன் இந்தியாவில் இருப்பதாக கடந்த 22 ஆம் திகதி சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமது பயணத்திற்காக அரசாங்கத்தின் பணம் செலவிடப்படவில்லை எனவும் தனிப்பட்ட பணத்திலேயே இந்தியாவிற்கு சென்றுள்ளதாகவும் அமைச்சரின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.