நடிகர் தனுஷை குற்றம் சாட்டிய நயன்தாரா!
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ வரும் நவம்பர் 18-ஆம் திகதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ள நிலையில், இந்த வீடியோவில் “நானும் ரவுடி தான்” படத்தில் இடம் பெற்ற பாடல்களை பயன்படுத்துவதற்கு தயாரிப்பாளர் தனுஷின் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, நயன்தாரா தனுஷுக்கு ஒரு கடிதம் எழுதி, சினிமா பின்புலத்தை குறித்து குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
இந்த சம்பவம் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா தனது கடிதத்தில், தனுஷின் சினிமா பின்புலத்தை ஒப்பிட்டு அதற்கு எதிராக பேசினார்.”சினிமா பின்புலம் இல்லாமல், தனி பெண்ணாக, கடின உழைப்பால் இந்த நிலைக்கு வந்துள்ளேன்” என்றார்.
இதற்கு தனுஷின் ரசிகர்கள் மற்றும் சில சினிமா பிரபலங்கள் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். “யார் மகன் என்பது முக்கியமில்லை. கடின உழைப்பால் தான் சினிமாவில் உயர்ந்தவராக விளங்கியவர்” எனவும் இப்படி சினிமா பின்புலத்தை வைத்து தாக்கி பேசுவது என்பது தவறான செயலாகும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.