நயினாதீவில் மின்சாரம் வழமைக்கு திரும்பியது
நயினாதீவு மக்களின் பயன்பாட்டுக்கான மின் பிறப்பாக்கி ஒருவாரமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்டதனால், நாள் ஒன்றுக்கு நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக மின் வெட்டு இடம்பெற்று வந்தது.
இதனால் நயினாதீவு மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இந்நிலையில் தற்போது, நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான நிலையில், நயினாதீவுக்கு நேற்று புதிய மின்பிறப்பாக்கி ஒன்று இலங்கை மின்சார சபையினரால் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.