நியூசிலாந்து ஆக்லாண்ட் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள்
தமிழீழ தேசிய மாவீரர் நாளானது நியூசிலாந்தில் உள்ள ஆக்லாண்ட் இல் பெருந்திரளான மக்கள் முன்னிலையில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது.
பொதுச்சுடரானது நெடுங்கால தமிழீழ ஆர்வலர் ரத்தினவேல் ஆறுமுகப்பெருமாள் அவர்களால் ஏற்றப்பட்டது.
மாவீரர் நாள் மரபின் படி மணியோசை இசைக்கப்பட்டது. பின்னர் அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து ஈகைச்சுடரனது மாவீரர் கப்டன் அறவளதிஅவர்களின் சகோதரி திருமதி கேஜின் ஏற்றிவைத்தார்.